சங்கரா மீன் குழம்பு
TITLE:சங்கரா மீன் குழம்பு
தேவையான பொருட்கள்
சங்கரா மீன் - 1 kg
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1
புளி - நெல்லிக்காய் அளவு
பூண்டு - 10 பல்
கடுகு, வெந்தயம்- தாளிப்பதற்கு சிறிதளவு
மல்லித்தூள் - 4 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
நல்லெண்ணெய் - 5 ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
அரைக்கத் தேவையான பொருட்கள்
தேங்காய் - கால் மூடி
சின்ன வெங்காயம் - 5
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
தக்காளி - 1
செய்முறை
மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
சின்ன வெங்காயம் ,தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பூண்டை ஒன்றிரண்டாக தட்டி வைத்துக் கொள்ளவும்.
புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
அரைக்கக் கொடுத்துள்ள தேங்காய் ,மிளகு ,சீரகம், சின்னவெங்காயம், தக்காளி அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நைஸ் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் உற்றி கடுகு ,வெந்தயம் போட்டு தாளித்து அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு போட்டு நன்கு வதக்கவும்.
வதங்கியவுடன் மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கி அதனுடன் தக்காளி போட்டு இரண்டு நிமிடம் வதக்கி புளித்தண்ணீர் அதனுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
கொதித்து பச்சை வாசனை போனவுடன் தேங்காய் விழுது குழம்பிற்கு தேவையான அளவுக்கு உப்பு மூன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.குழம்பு நன்கு கொதித்து ஓரளவு கெட்டியானவுடன் அதில் மீனை சேர்க்கவும்.
மீன் போட்ட பிறகு குழம்பை கிளற கூடாது .
குழம்பு நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் கடாயை மூடி அடுப்பை 10 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.
இறக்கி வைத்த குழம்பில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் , சிறிது பச்சை கருவேப்பிலையும் சேர்த்து மூடி வைத்தால் குழம்பு மிகவும் ருசியாக இருக்கும்.\
SPONSHORSHIP:
"This Content Sponsored by Genreviews.Online
Genreviews.online is One of the Review Portal Site
Website Link: https://genreviews.online/
Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"


Comments
Post a Comment